ஏர்போர்ட்டில் பயணியை அடித்து குரல்வளையை நெரித்த இன்டிகோ ஊழியர்கள்.

 

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் பயணி ராஜீவ் கத்யால்(53) என்பவரை இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் அடித்து கீழே தள்ளி குரல்வளையை நெரிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Capturedvxcvxஅந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ராஜீவ் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது, விமானத்தில் வந்திறங்கிய நான் பேருந்துக்காக காத்திருந்தேன்.

விமான நிழலில் நின்று கொண்டிருந்த என்னை இன்டிகோ ஊழியர் ஒருவர் தள்ளிப் போய் நிற்குமாறு திட்டினார்.

திட்டுவதற்கு பதில் பேருந்துக்கு ஏற்பாடு செய்யலாமே என்று நான் கூறினேன். என்ன செய்வது என்று நீங்கள் ஒன்றும் சொல்லித் தர வேண்டாம் என்றார் அவர்.

பேருந்து வந்தபோது அதில் ஏறவிடாமல் தடுத்தனர். இவனுக்கு பாடம் கற்பிப்போம் என்று கூறி என்னை அடித்து கீழே தள்ளி கழுத்தை நெரித்தனர் என்றார்.

இந்த சம்பவம் குறித்து இன்டிகோ நிறுவனம் ராஜீவிடம் மன்னிப்பு கேட்டதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்