முதல் பந்திலேயே இந்தியாவை வீழ்த்திய லக்மால்.

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சற்று முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

மழை காரணமாக போட்டியின் நாணய சுழற்சி மதிய போசன இடைவேளையின் பின்னரே இடம்பெற்றிருந்தது. அதில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்துள்ளார்.

எனினும், மைதானத்திற்கு வீரர்கள் வந்தவுடனேயே மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தமையினால் வீரர்கள் மீண்டும் ஓய்வறை திரும்பினர். தற்பொழுது மீண்டும் போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது சுரங்க லக்மாலினால் வீழ்த்தப்ப்டட முதல் பந்திலேயே அவர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ராஹுலின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

அண்மைய பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியிருக்கும் இலங்கை அணி, இந்திய மண்ணில் இதுவரை எந்த டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெறவில்லை என்பதால் இந்தப் போட்டியில் தமது முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்குகின்றது.

பாகிஸ்தானுடனான இலங்கை டெஸ்ட் குழாத்தில் அடக்கப்பட்டிருந்த வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் கெளசால் சில்வா ஆகியோர் இந்திய அணிக்கெதிரான விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குசல் மெண்டிசின் மூன்றாம் இடத்தினை லஹிரு திரிமான்னவும், கெளசால் சில்வாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான இடத்தினை சதீர சமரவிக்ரமவும் அணியில் பிரதியீடு செய்கின்றனர்.

அதேபோன்று நீண்ட காலத்தின் பின்னர் சகலதுறை வீரரான தசுன் சானக்கவும் இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். முக்கியமாக அனைவரும் எதிர்பார்த்திருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்சும் காயம் காரணமாக ஓய்வில் இருந்த நிலையில், இன்றைய போட்டியில் மீண்டும் இலங்கை அணியில் இணைகின்றார்.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமான்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால்(அணித்தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, தில்ருவான் பெரேரா, தசுன் சானக்க, லஹிரு கமகே, சுரங்க லக்மால், ரங்கன ஹேரத்

இந்திய அணி

சிக்கர் தவான், லோக்கேஷ் ராகுல், செட்டெஸ்வர் புஜாரா, விராத் கோலி(அணித் தலைவர்), அஜிங்கியா ரஹானே, ரவிச்சந்திரன் அஷ்வின், ரித்திமன் சஹா, ரவீந்திர ஜடேஜா, புவ்னேஸ்வர் குமார், மொஹமட் சமி, உமேஷ் யாதவ்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்