சூர்யா படத்தில் இணைந்த இளம் நடிகை

ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் இளம் நடிகை மீரா மிதுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இவர் ஏற்கனவே 8 தோட்டாக்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சூர்யா தனத டப்பிங் பணிகளை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்