இரண்டு தரவுகளிலும் எனது மகன் பெயர் இருந்தும் எப்படி சிறைச்சாலையில் இடமாற்றம்……..

இரண்டு தரவுகளிலும் எனது மகன் பெயர் இருந்தும் எப்படி சிறைச்சாலையில் இடமாற்றம் செய்ததாக கூறுகின்றனர் என விரக்தியுடன் தன் கருத்தை முன்வைக்கின்றார் கணேஷன் சிவகாமிப்பிள்ளை.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அலையும் சங்கத்தின் வடகிழக்கு 8 மாவட்டங்களின் தலைவிகள் நேற்று 16 திகதி கொழும்பில்  நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதெ அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கூறுகையில்……………..,

எனது மகன் 2008 ஆம் ஆண்டு காணாமல் போனவர் 2010 ஆம் ஆண்டு தான் அவர் மூசாவில் உள்ளதாக தகவல் கிடைத்தது நான் மூசாவிற்கு போன நேரங்களில் எனது மகன் இங்கு இல்லை என பல தடவைகள் திருப்பி அனுப்பினர் பின் நான் வெலிக்கடை சிறையில் சென்ற போது அங்கு அவரது தரவுகள் பதியப்பட்டிருந்தது ஆனால் அவர் அங்கு இருக்கவில்லை பின்னர் நான் வெலிக்கடை சிறையில் போன நேரங்களில் அவரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினர். எனது மகன் தொடர்பான தரவுகள் பெயர்கள் இருந்தும் இடமாற்றம் செய்யப்படுள்ளதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு காரணம் தற்போது நான் வீட்டில் ஒரு பெண் பிள்ளையுடன் தனியாக மிக கஸ்டங்களுடன் வாழ்கின்றேன் இதற்கு ஒரு சரியான தீர்வு பெற்றுத்தரும் படி கேட்கின்றார் கணேஷன் சிவகாமிப்பிள்ளை………..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்