குழந்தை பிறந்த பிறகு, காதலனை கைப்பிடித்தார் செரீனா..

டென்னிஸ் உலகில் ஜாம்பவனாக திகழ்ந்து வரும் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். 36 வயதாகும் செரீனா 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர் ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் அலெக்சிஸ் ஓகானியனை காதலித்து வந்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்ற செரீனா கோப்பையை வென்று சாதனைப் படைத்தார். இந்த தொடரில் விளையாடும்போது தான் கர்ப்பிணியாக இருந்ததாக செரீனா கூறினார். பின்னர் அது உறுதி செய்யப்பட்டது.

கர்ப்பிணியாக இருந்ததால் அதன்பின் அவர் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. செரீனாவிற்கு கடந்த செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஒன்றரை மாதம் கழித்த நிலையில், செரீனாவிற்கும் அவரது காதலரும் ஆன அலெக்சிஸ் ஓகானியனுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கலந்து கொள்வேன் என்று செரீனா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்