சவுதியிலிருந்து தாய்நாட்டுக்கு திரும்பி வந்த இளைஞருக்கு, விமானத்தில் நேர்ந்த துயரம் ..!

சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சலீம் (35), இவர் கடந்த 14 ஆண்டுகளாக சவுதியின் ரியாத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் சவுதியிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இரு தினங்களுக்கு முன்னர் சலீம் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து விமானம் அவசரமாக அபுதாபியில் தரையிறக்கப்பட்டது.
உடனடியாக சலீம் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், சலீமை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா அதிகாரி ரன்ஜன் தட்டா கூறுகையில், பொலிஸ் அனுமதி மற்றும் சலீமின் இறப்பு சான்றிதழை எதிர்நோக்கியுள்ளோம்.
சலீம் மரணம் குறித்தும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள், இது முடிந்த பின்னர் அவர் சடலத்தை தாய்நாட்டுக்கு அனுப்பிவிடுவோம் என கூறியுள்ளார்.
சலீமின் நண்பர் அகமது ஷெரீப் கூறுகையில், சலீமுக்கு சிறியளவிலான இதய நோய் இருந்துள்ளது.
சவுதியில் அவரின் மருத்துவ காப்பீடு நடைமுறைகள் சரியாக வராததால், மருத்துவர்கள் உடனடியாக இந்தியாவுக்கு சென்று அவரை சிகிச்சை பெற வலியுறுத்தினார்கள்.
சலீப் இரண்டு மாதம் கழித்து தனது தங்கை மற்றும் தம்பி திருமணத்தில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் சிகிச்சைக்காக திடீர் பயணம் மேற்க்கொண்டார் என கூறியுள்ளார்.
உயிரிழந்த சலீமுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்