மூழ்கும் நகரங்கள் பட்டியலை, வெளியிட்டது நாசா..! லண்டனுக்கும் ஆபத்து..

கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பிற்காலத்தில் தண்ணீரால் மூழ்கப் போகும் நகரம் பற்றி  நாசா வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
 
கடலில் இருக்கும் மலை போன்ற ராட்சத ஐஸ் மலைகள் உருகி வருவது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி நடப்பதில்லை என்பது நமக்கு தெரிந்த ஒன்றே..
அவ்வாறு கடல்நீர்மட்டம் உயர்ந்துவிட்டால்,அண்டார்டிகா, க்ரீன்லேண்ட், மங்களூர் ஆகிய பகுதிகளில் கடல் மட்டம் அதிகளவில் அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
 மும்பையை பொருத்தவரை 1.526 மி.மீ., 
அண்டார்டிகா, க்ரீன்லேண்ட், மங்களூர் 1.598 மி.மீட்டராக நீர்மட்டம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கும் போது, இவ்வாறு கடல் நீர்மட்டம் உயர்ந்தால் அதிகளவில் எந்தெந்த  நகரம் பாதிக்கப்படும் என்பதை கண்டறிய கிரேடியன்ட் பிங்கர் பிரின்ட் மேப்பிங் என்ற புதிய கருவி ஒன்றை நாசா கண்டுபிடித்துள்ளது.
இந்த கருவி மூலம் சுமார் 293 முக்கிய நகரங்களில் மேற்கொண்ட ஆய்வு மூலம் எந்த நகரம் அதிகம் பாதிக்கப்படும் என அறியப்பட்டு உள்ளது.
பாதிக்கப்படும் இடங்கள்.. 
க்ரீன்லேண்டின் (வடக்கு, கிழக்கு பகுதி ஐஸ் மலை) – நியூயார்க் பாதிக்கப்படும்.

கிரீன்லேண்டின் (வடமேற்கு பகுதி ஐஸ் மலை) -லண்டன் பாதிக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

க்ரீன்லேண்ட் மற்றும் அண்டார்டிகாவில் ஐஸ் மலைகள் – தெற்கு ஆசியாவில் உள்ள சிட்டாகாங், கொழும்பு, கராச்சி ஆகிய நகரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுமாம்.
நாசாவின் இந்த தகவலால், மங்களூர் மும்பை மற்றும் வெளிநாடுகளில் கணிக்கப்பட்ட சில இடங்களில் மக்கள் சற்று பதற்றம் அடைந்து உள்ளனர்.
 குறிப்பு : மங்களூர்  மூழ்கும்  என  தெரிவித்த  நாசா சென்னை  பற்றி  எந்த  தகவலும் தெரிவிக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்