திருட முயன்ற மர்ம நபரை, அடித்து விரட்டிய பெண்கள்..!

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற  திருட்டு முயற்சி சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவகத்தில் 4 பெண்கள் வேலைப்பார்க்கின்றனர். அன்று வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் உணவு வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பணம் செலுத்துமிடத்தில் இருந்த பணத்தை எடுக்க முயன்றார். அங்கிருந்த பெண் அவரிமிருந்து பணத்தை திரும்ப பறிக்க முயன்றார். இருவருக்குமிடையே சண்டை நடைபெற்றது.

பின்னர் அங்கு வேலைப்பார்க்கும் மற்ற பெண்கள் சேர்ந்து வந்து திருடனை தாக்கினர். அவர்கள் அடுத்த அடி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடி விட்டான். அவன் 30 டாலர் மட்டும் திருடி சென்று விட்டான். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சிசிடிவி பதிவை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். அந்த பெண்களின் தைரியத்தை பாராட்டினர். அவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்