பின்தங்கிய கிராமங்கள் இன்னமும் அபிவிருத்தி அடைய வேண்டும் – தவிசாளர் இரா.சாணக்கியன்

(பழுகாமம் நிருபர்)

பின்தங்கிய கிராமங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை பிரதேச சபைகள் மற்றும் அரசாங்கம் புனரமைத்து கொடுத்து அவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசானர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். துறைநீலாவணை லயன்ஸ் ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தை புனரமைப்பு செய்துவைத்து விட்டு கருத்து தெரிவித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களில் பல விளையாட்டு மைதானங்கள் பற்றைக்காடுகளாகவும், புனரமைப்பு செய்யப்படாமலும் உள்ளன. இவற்றை பிரதேச சபைகள் புனரமைப்பு செய்து கொடுத்தால் அப்பிரதேச இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வரலாம். இப்பிரதேச இளைஞர்களிடம் பல திறமைகள் இலைமறைகாயாக மறைந்துள்ளது.

இதனை வெளிக்கொண்டு வருவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரதேச மக்கள் அடிப்படை வசதிகளன்றியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். துறைநீலாவணைக்கிராமம் அம்பாறை மாவட்ட எல்லையாக உள்ளது. இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் முன்னாள் பட்டிருப்பு தொகுதி பாரளுமன்ற உறுப்பினர் சி.மூ.இராசமாணிக்கத்தினால் வேறு இடங்களுக்கு குடியேற்றம் செய்யப்பட்டனர்.

அங்கும் அடிப்படை வசதிகளன்றிய நிலையில் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் ஆகவே இதனையும் தீர்த்து வைக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது எனவும், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு பல மைதானங்களை புனரமைப்பு செய்து கொடுத்துள்ளதுடன் இன்னமும் செய்து கொடுக்க தயாராக உள்ளதுடன், இராசமாணிக்கம் அவர்களினால் குடியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு உதவி செய்து கொடுப்பது எமது அமைப்பின் கடமையாகும். உதவிகளை செய்துகொண்டும் இருக்கின்றோம் எனவும் தெரவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்