கனடாவில் புதிய மின்சார டிரக்!

மொன்றியல்–ரெல்சாவின் புதிய மின்சார டிரக் வண்டியை வாங்கும் முதல் கொள்முதலாளர்கள் மத்தியில் லோப்லா நிறுவனமும் அடங்குகின்றது.

கனடாவின் மிகப்பெரிய சுப்பர் மார்க்கெட் தொடரான (TSX:L) முன் கூட்டியே ரெல்சா செமி எனப்படும் இந்த வாகனங்கள் வெளிவர முன்னரே 25-வாகனங்களிற்கு ஆர்டர் கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நடவடிக்கைகளை மின்சார மயமாக்கும் எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இது அமைகின்றதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2030-அளவில் தங்களது கரியமில தடத்தை குறைப்பதென்ற உறுதிப்பாட்டின் காரணமாக முழுமையான மின்சார மயமாக்கலை ஏற்படுத்துகின்றதென கூறப்படுகின்றது.

தங்களது போக்குவரத்து டிரக்குகளிலிருந்தும் குளிரூட்டப்பட்ட டிரெயிலர்களிலிருந்தும் டீசலை அகற்றுவதால் 94,000-தொன்களிற்கும் மேலான காபன் டயொக்சைட்டை உமிழ்வுகளை குறைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 20,000-கார்களை வீதியில் இருந்து அகற்றுவதற்கு சமமாகும்.

ரெல்சா டிரக்குகளின் முதல் விநியோகம் 2019ல் எதிர்பார்க்கப்படுகின்றது.

வழங்கப்படவில்லை ஆனால் ரெல்சா செமியின் ஒதுக்கீடு டிரக் ஒன்றிற்கு யு.எஸ்.டொலர்கள் 5,000 ஆகும்.

வால்-மார்ட் நிறுவனமும் 15 டிரக்குகளிற்கு-கனடிய பாதைகளிற்கு 10 உட்பட- முன்-ஆர்டர் கொடுத்து விட்டதாகவும் தெரிவிக்கின்றது.

செமி அதிக விரைவாகவும் நேர்மறையாகவும் செயல் படுவதுடன் டீசல் டிரக்கை விட அதிக மைல்களை அதே அளவு நேரத்தில் உள்ளடக்கும் எனவும் பாதுகாப்பானதெனவும் கூறப்பட்டுள்ளது.

இதன் சொந்த காரர் குறைந்தது 1.6மில்லியன் கிலோ மீற்றர் எரிபொருள் விலையில் 200,000 யு.எஸ்.டொலர்களை சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்