முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

இதனை தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது. முதல் 2 நாள் ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டு வந்தது. ஆட்டம் தொடங்கிய சில மணி நேரங்களில் மழை குறுக்கிட்டதால் முழுமையாக நடைபெறவில்லை. இந்த நிலை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்களை எடுத்தது.

இந்தியா அணி சார்பில் புஜாரா அரை சதமடித்தார். இலங்கை தரைப்பில் லக்மால் 4 விக்கெட்டுகளையும், சனாகா, பெரேரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை அடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கியுள்ளது. சற்று நேரம் வரை இலங்கை அணி 55/2 என்று துடுப்படுத்தாடிக்கொண்டு இருக்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்