சீனாவில் கடுமையான இரு நிலநடுக்கங்கள்: அச்சத்தில் பொதுமக்கள்

சீனாவின், திபெத் பகுதியில் இன்று காலை கடுமையான இரு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.3 ரிச்டர் அளவிலும் அடுத்து ஏற்பட்ட அதிர்வு 5 ரிச்டர் அளவிலும் பதிவாகியுள்ளன.

திபெத்தின் நிஞ்சியா பகுதியில் சுமார் 58 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்ட குறித்த நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கங்கள் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்களில் உணரப்பட்ட அதிர்வின் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் குறித்த நிலநடுக்கங்கள் மூலம் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்