மனைவியை கொன்று விட்டு, கணவர் செய்த செயல்..

மனைவியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு பொலிசிடம் தப்பிக்க கணவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் லீட்ஸ் நகரை சேர்ந்தவர் அக்‌ஷர் அலி (27), இவர் மனைவி சினீட் உட்டிங் (26), தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்
சினீட் கடந்த மே மாதம் எரிக்கப்பட்ட நிலையில் ஆல்வுட்லே பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் சடலமாக கிடந்தார்.
இதையடுத்து சினீட்டை, அக்‌ஷர் அலியும் அவரது நண்பர் யஷ்மின் அகமதும் சேர்ந்து கொலை செய்ததாக பொலிசார் இருவரையும் கைது செய்தார்கள்.
இருவரிடமும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், திடுக்கிடும் விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அகமது வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட சீனிட்டை அவர் கணவர் அலி சுத்தியால் அடித்தும், கத்தியால் ஆறு முறையும் குத்தியும் கொன்றுள்ளார், இதற்கு அகமது உதவியுள்ளார்.
சடலத்தை வீட்டு பாதாள அறையில் இரு நாட்கள் வைத்திருந்து, பின்னர் காட்டுபகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி இருவரும் கொளுத்தியுள்ளனர்.
இதையடுத்து பொலிசிடம் சிக்காமல் இருக்க சினீட் செல்போனுக்கு அலி உருக்கமான மெசேஜை அனுப்பியுள்ளார்.
அதில், நம் குழந்தைகள் உன்னை அதிகம் மிஸ் செய்கின்றன, நானும் தான் என குறிப்பிட்டுள்ளார்.
காட்டு வழியாக சென்ற மாணவர்கள் சினீட் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சினீட் கொலைக்கும் அவர் சடலத்தை மறைக்கவும் அலியின் அம்மா அக்தர் பி மற்றும் சகோதரர் அசிம் அலி உதவியதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அதை அவர்கள் மறுத்துள்ளனர்.
இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்