விமானத்தின் கழிவறையில் புகுந்து திருட்டுத்தனமாக பயணித்த நபர்: அதிர்ச்சியில் பயணிகள்..!!

விமானத்தின் கழிவறையில் புகுந்து திருட்டுத்தனமாக பயணித்த நபர்: அதிர்ச்சியில் பயணிகள்..!!


லண்டனில் இருந்து ஜெனிவா செல்லும் விமானத்தில் நபர் ஒருவர் திருட்டுத்தனமாக புகுந்து கழிவறையில் மறைந்திருந்து பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் லண்டன் – ஜெனிவா விமானத்தில் திருட்டுத்தனமாக புகுந்து கழிவறையில் மறைந்திருந்துள்ளார்.

லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானம் புறப்பட்ட நிலையில் விமான கழிவறை பயன்பாட்டில் இருப்பதாக காடியதை ஊழியர்கள் கவனித்துள்ளனர்.அதேசமயம் பயணிகள் அனைவரும் தத்தமது இருக்கையிலும் அமர்ந்திருந்துள்ளனர்.

இதனையடுத்து விமான ஊழியர்கள் சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் கழிவறையில் மறைந்திருந்த நபரை வெளியே வரவழைத்து கைது செய்துள்ளனர்.

விமான நிலையத்தின் அத்துணை பாதுகாப்பு வளையங்களையும் மீறி குறித்த நபர் எப்படி விமானத்தினுள் புகுந்தார் என்பது வியப்பாக உள்ளது என பயணிகள் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆனால் கேட்விக் விமான நிலைய நிர்வாகம் வெளியிட்ட தகவலில், குறித்த 25 வயது சுவிஸ் பயணியிடம் அனுமதிச் சீட்டு இருந்ததாகவும்,

அவர் முன்பதிவு செய்த விமானத்தை தவறவிட்டதால் அடுத்து வந்த விமானத்தில் புகுந்து ஜெனிவா செல்ல திட்டமிட்டதாகும் தெரிவித்துள்ளது.

குறித்த பயணி தமது அவசரம் கருதி தவருதலாக விமானத்தில் நுழைந்திருந்தாலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு கிழமைகள் முன்னர் 7 வயது சிறுமி ஒருவர் அனுமதிச் சீட்டு ஏதுமின்றி விமானத்தில் நுழைந்து ஜெனிவாவில் இருந்து பயணமான சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்