நாட்டில் இன்று முதல் எதிர் வரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேலையில் இடியுடன் கூடிய மழை காலநிலை அதிகரிக்ககூடும்.

நாட்டில் இன்று முதல் எதிர் வரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேலையில் இடியுடன் கூடிய மழை காலநிலை அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.வடக்கு மற்றும் கிழக்கு கரையோர பிரதேசங்களில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் சுமார் 75மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.

 

மேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமுடனான காலநிலை நிலவும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது..

 

இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் திணைக்களம் கேட்டுகொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்