கனடா நாட்டில் திரு. டி இமான் அவர்களின் இசை நிகழ்வு

கனடா நாட்டில் நவம்பர் மாதம் 17ம் திகதி 1199 Kennedy Road இல் அமைந்துள்ள Kennedy Convention Centre இல் இரு பெரும் பிரமாண்ட நிறுவனங்களான “இசை எம்பயரும் யோகி அன் பாட்னர்ஸ் உம் இணைந்து ஏப்பிரல் மாதம் 28ம் திகதி 2018 ம் ஆண்டு பிறம்டனில் அமைந்துள்ள “POWERADE CENTRE” இல் பிரபல இசையமைப்பாளரும் இலங்கைத்தமிழர்களின் அபிமானத்துற்கு உரியவருமான திரு. டி இமான் அவர்களின் இசை நிகழ்வு ஒன்றை நடாத்தவுள்ளனர். இந்நிகழ்வில் 100 நமது கனேடிய கலைஞர்களும், 20 இந்தியக் கலஞர்களும் பங்கெடுத்து எம்மை மகிழ்விக்க இருக்கின்றார்கள்.

அந்த நிகழ்விற்கு சாட்சியாக இரு நிறுவனங்களும் சேர்ந்து ஊடகவியளார்களுக்கான ஒரு சந்திப்பு ஒன்றை நடத்தினர். இந்நிகழ்வு எல்லோரும் பிரமிக்கும் வகையில் முற்று முழுதாக இளையவர்களாலேயே ஒவ்வொன்றாகப் பார்த்துப்பார்த்து ஒழுங்கமைக்கப்பட்டு மிக வெற்றிகரமாக நடாத்தப்பட்டது மிகவும் பாராட்டப்பட்ட விடையம். இந்நிகழ்வில் பல நண்பர்கள், தொழில் அதிபர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள். அத்துடன் நாவிற்கு சுவையான உணவுடன் இனிதே நிறைவடைந்தது.

திரு. டி இமான் அவர்கள் நமது மண்ணின் கலைஞர்களை மதித்து அவர்களின் நீண்ட கால கனவுகளை நனவாக்கி அவரின் இசையில் இடமளித்து நமது
பிள்ளைகளையும் தன்னோடு இணைத்து பயணிக்கும் ஒரு நல்ல மாமனிதர் கனடாவிற்கு மீண்டும் வருகை தந்து எம்மை இசை மழையில் நனைக்கவிருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. முதன்முதலாக நமது பிரபல பாடகி எலிசபெத் மாலினி அவர்களுக்கான முதல் சந்தர்ப்பத்தை வழங்கினார், அந்த சந்தர்ப்பத்தை எலிசபெத் மாலினி அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு. இமான் அவர்கள் இன்னும் நமது பல கலைஞர்களின் கனவுகளை நனவாக்குவார் என பல நம்பிக்கைகளுடன் இன் நிகழ்வு பிரமாண்டமானதாக நடைபெற வேண்டுமென தமிழ்சிஎன்என் குடும்பம் மனதார வாழ்த்துகின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்