மகள்களுக்கு இணையான அழகியாக ஜொலிக்கும் தாய்..

கனடாவை சேர்ந்த பெண்ணொருவர் தனது டீன்-ஏஜ் மகள்களுக்கு தாயா அல்லது சகோதரியா என வியக்கும் அளவுக்கு  இளமையாக காட்சியளிக்கிறார்.
நோவா ஸ்கோடியா மாகாணத்தை சேர்ந்தவர் கெயின்யா பூகர் (40) இவருக்கு கேலெயின்யா (18) கொலியியா (16) என்ற மகள்களும் ஒரு மகனும் உள்ளான்.
கெயின்யா தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது.
இதற்கு காரணம், கெயின்யா தனது மகள்களுக்கு தாய் போல இல்லாமல் சகோதரி போல  இளமையாகவும், கவர்ச்சியாகவும் உள்ளார்.
இணைய பயன்பாட்டாளர்கள் பலர் லெயின்யா மற்றும் கொலியியாவின் சகோதரி கெயின்யா என்றே நினைத்துள்ளார்கள்.
பலர் கெயின்யாவை புகழ்ந்தாலும், சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.
ஒருவர் தனது பதிவில், இந்த அம்மாவுக்கு வயதே கூடாதா? என பதிவிட்டுள்ளார்.
இன்னொருவர், இது அவர்களின் அம்மாவாக இருக்காது, சகோதரியாக தான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அதே போல சிலர், கெயின்யா மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி புகைப்படங்களை வெளியிடுவதாக விமர்சித்துள்ளனர்.
சில எதிர்மறை விமர்சனங்கள் தன்னை வருத்தமடைய செய்தாலும், தனது புகைப்படங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியடைய் செய்துள்ளதாக கெயின்யா கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்