ஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஆஸ்திரேலியா அருகே உள்ள தீவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மிக பெரிய பரபரப்பு காணப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில்  உள்ள நியூ கலிடோனியா, வானுயாடு உள்ளிட்ட பல்வேறு தீவு பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் பசுபிக் சுனாமி மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பதிப்பினால் அப்பகுதியில் சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்