வறுமையின் காரணமாக டீக்கடை நடத்தும், குத்துச்சண்டை சாம்பியன்..

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆயுஷ் வைஸ்யா என்னும் குத்துச்சண்டை வீரர் வறுமையினால் டீக்கடை நடத்தி வருகிறார்.

22 வயதான இளம் குத்துச்சண்டை வீரர் ஆயுஷ், பல பதக்கங்களை வென்றுள்ளார். தனது பள்ளி நாட்களின்போது ஆசிரியர்களின் அறிவுரையால், ஆயுஷ் குத்துச்சண்டை பயிற்சியினை மேற்கொண்டார்.

அதன் பின்னர், 2011 முதல் 2016 வரை பல வெற்றிகளை பெற்று சாம்பியனாக திகழ்ந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரின் தந்தை இறக்கவே, குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டது.

தனக்கு உதவ வேண்டி அரசிடம் பல வழிகளில் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை, அத்துடன் தேசிய குத்துச்சண்டை சாம்பியன் ஆக வேண்டும் என்கிற அவரது கனவும் தகர்ந்து போனது.

அதனால் வேறு வழியின்றி தனது படிப்பினை பாதியிலேயே நிறுத்திய ஆயுஷ், டீக்கடை ஒன்றை வைத்தார். பகுதிநேரமாக சிறுவர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சியும் அளித்து வருகிறார்.

காலையில் பயிற்சி எடுக்கும் ஆயுஷ், 7 மணி முதல் 12 மணி வரை டீக்கடை நடத்துகிறார், அதன் பின்னர், சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

டீக்கடை மூலமாக வரும் ரூ.5000 ரூபாயையும், பயிற்சி அளிப்பதால் கிடைக்கும் ரூ.9000 ரூபாயையும் வைத்து தனது வாழ்வை நடத்தி வருகிறார் இந்த குத்துச்சண்டை வீரர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்