நடுவரிடம் சீறிப்பாய்ந்த ஷகீப், அதிர்ச்சியில் ரசிகர்கள் (வீடியோ)

தற்போது பங்களாதேஷில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் நடந்து வருகிறது. அந்த தொடரின் 21வது போட்டியில் தாக்கா டைனமைட்ஸ் மற்றும் கோமில்லா விக்டோரியான்ஸ் அணிகளும் மோதின. அப்போட்டியின் போது ஷகிப் அல் ஹசன் நடுவரிடம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். இதனால், பங்களாதேஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

அந்த தொடரின் 21வது போட்டியில் தாக்கா டைனமைட்ஸ் மற்றும் கோமில்லா விக்டோரியான்ஸ் அணிகளும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தாக்கா டைனமைட்ஸ் அணி 18.3 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

தாக்கா அணியின் எவின் லெவிஸ் 7 ஓட்டங்கள் அடித்து ஆட்டம் இழந்தாலும், மேற்கிந்திய அணியின் சுனில் நரேன் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார். ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் எதிரணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் பறக்கவிட்டார்.

ஒரு முனையில் சுனில் நரேன் அடித்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் அவர் அணியின் விக்கெட்டுகளில் விழுந்து கொண்டே இருந்தது. லெவிஸ் 7 , சங்ககரா 28, பொல்லார்ட் 01, ஷகிப் அல் ஹசன் 3 ஓட்டங்களை எடுத்து நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஏமாற்றினார். இதனால், 18.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது தாக்கா அணி.

20 ஓவருக்கு 129 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய கோமில்லா விக்டோரியான்ஸ் அணி தொடக்கத்திலேயே லிட்டான் தாஸ் விக்கெட்டை பறிகொடுத்தது. அனைவரும் 15, 20 என அடித்த போது, ஒரு முனையில் கோமில்லா விக்டோரியான்ஸ் அணிதும் விக்கெட்டுகள் சரிந்தன. ஆனால், அந்த அணியின் நட்சத்திர வீரர் பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி வாங்கி தந்தார்.

அந்த போட்டியின் போது 9வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஷகிப் அல் ஹசன் வீசிய பந்து இம்ருல் கெய்ஸின் காலில் பட்டது. அதற்கு அப்பீல் செய்தார், ஆனால் அவுட் இல்லை என நடுவர் மறுத்துவிட்டார். கண்டிப்பாக அந்த பந்து ஸ்டம்பை அடித்திருக்கும், ஆனால் நடுவர் மறுத்துவிட்டதால், ஷகிப் அல் ஹசன் மேலும் அப்பீல் செய்தார். ஆனால், நடுவர் அவரின் தீர்ப்பை மாற்றவில்லை. இதனால், காண்டான ஷகிப் அல் ஹசன் ஆக்ரோஷமாக கத்தி கொண்டே சென்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்