ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இரவு கூடவுள்ளது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இதன்போது பினை முறி மோசடி தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்