அனுமதிப் பத்திரமின்றி மரப்பலகை கொண்டு சென்ற ஒருவர் கைது

(க.கிஷாந்தன்)

 

வெலிமடை குருத்தலாவ பகுதியில் இருந்து வெலிமடை நகர பகுதிக்கு அனுமதி பத்திரம் இல்லாமல் லொறி ஒன்றில் ஒரு தொகை கிரான்டிஸ் என்ற மரப்பலகைகளை கொண்டு சென்ற ஒருவர் வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

21.11.2017 அன்று மாலை வெலிமடை ஹப்புத்தளை பிரதான வீதியில் வெலிமடை நகரப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் வைத்து குறித்த லொறியை வெலிமடை பொலிஸார் விசாரணைக்ககுட்படுத்தியபோது, சட்டவிரோதமாக அனுமதி பத்திரம் இல்லாமல் மரப்பலகைகளை மாலை நேரத்தில் கொண்டு செல்லப்படுகின்றமை கண்டறியப்பட்டது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மரப்பலகைகளின் பெறுமதி இரண்டு இலட்சத்திற்கு அதிகமான தொகை என பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து லொறியின் சாரதியை சந்தேகத்தின் பேரில் வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்த சந்தேக நபரையும் லொறியையும் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்