வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் தாதியர்கள் உட்பட 5 சுகாதார பிரிவினர் பணிப்புறக்கணிப்பு

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் தாதியர்கள் உட்பட 5 சுகாதார பிரிவினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயவவுனியா மாவட்ட வைத்தியசாலையில் தாதியர்கள் உட்பட 5  சுகாதார பிரிவினர் பணிப்புறக்கணிப்பிறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை முன்னிட்டு வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள்,மருந்தாளர்கள்,எக்ஸ்ரே கதிரியக்க உத்தியோகத்தர்கள், மருத்துவ மாதுக்கள், பொதுச்சுகாதார பிரிவினர் உட்பட 5 சுகாதார பிரிவு உத்தியோகத்தர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலை வந்துள்ள நோயாளர்கள் வைத்தியர்களால் பரிசோதிக்கப்பட்டபோதிலும் மருந்தாளர்களும் குறித்த பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் மருந்துகளை பெற்றுக்கொள்ளாமல் வீடு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சிறுநீரக நோயாளர்கள் மற்றும் சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்களிற்கு கூட மருந்துகள் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் க.ஜனார்த்தனன் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடு, பதவி உயர்வு, மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, கைவிரல் அடையாள வருகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் நோயாளர்களினதும் பொதுமக்களினதும் நன்மை கருதி வேலை நிறுத்தத்தின் போது உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கான அவசர சிகிச்சைக்கு மாத்திரம் தாதியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்