சற்றுமுன்னர் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் வீதி விபத்து.

(டினேஸ்)

காத்தாங்குடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பாலத்திற்கு அருகாமையில் மோட்டார்வண்டி மற்றும் முச்சக்கரவண்டி ஆகிய வாகனங்கள் இரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி விபத்தானது காத்தாக்குடி பிரதேசத்திலிருந்து மட்டு நகரை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முட்பட்ட போதெ மோர்டார்வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது மோட்டார்வண்டியில் பயணித்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயங்களுக்குள்ளாகி சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தாங்குடி  போக்குவரத்து பொலீஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை காத்தாங்குடி பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்