கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!
இம்மாதம் 25 மற்றும் 26ம் திகதிகளில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்வுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம இன்று (22)  திருகோணமலையிலமைந்துள்ள  ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டின் போது தெரிவித்தார்.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்காக நடைபெற்ற போட்டிப்பரீட்சைக்கு 6000 பேர் அளவில் தோற்றியிருந்ததார்கள். அவற்றுள் சுமார் 2500 பேர் சித்தியடைந்ததனர். அவர்களுள் உரிய தகைமைகள் கொண்டவர்களுக்கு இம்மாதம் 25ம் திகதி பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள அதேவேளை ஆங்கில டிப்ளோமாதாரர்கள் 172பேருக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் இம்மாதம் 26ம் திகதி மட்டக்களப்பு புனித சிசிலியா கல்லூரியில் நடைபெறவுள்ளதாக  கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.
கிழக்கு மாகாண மக்களுக்கு கிரமமான சேவையை வழங்கு; நோக்குடன் தனது தலைமையில் பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேவைகள் வழங்குகின்றபோது இன மத மொழி வேறுபாடுகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நீதி நியாயமான முறையில் சகல செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.தமது அபிலாசை கிழக்கு மாகாணத்தை சகல துறையிலும் கட்டியெழுப்புவதே பிரதான நோக்கம் என்று கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.
இவ்ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திஸாநாயக்கவும் கலந்து கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்