நகரசபை சுகாதார ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடித் தீர்வு வழங்கிய பிர்னாஸ் இஸ்மாயில்

பைஷல் இஸ்மாயில் –

மழை காலங்களில் திண்மக் கழிவகற்றல் சேவையினை தங்கு தடையின்றி முன்னெடுப்பதற்கும், அவர்களின் உடற் சுகாதாரத்தை பேனுவேண்டும் என்ற நோக்கத்துடன் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மழை பாதுகாப்பு அங்கிகளை நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயிலினால் வழங்கி வைக்கப்பட்டது.

திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவிலுள்ள ஊழியர்களின் குறைபாடுகளை கேட்டறியும் கலந்துரையாடல் இன்று (22) நகர சபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் நகர சபையில் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவில் கடமையாற்றும் ஊழியர்கள் தங்களின் பல குறைபாடுகளை இதன்போது  முன்வைத்தனர். இதேவேளை தற்போது மழைகாலம் என்பதால் தங்களின் பணிகளை திறன்பட கொண்டு செல்ல முடியாமல் உள்ளதாகவும், அதற்கான மழை பாதுகாப்பு அங்கிகளை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தனர்.

அவர்களின் கூற்றையும் தற்போதைய காலநிலையையும் கருத்திற்கொண்ட செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயிலினால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் உடற் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதிப்படுத்தியதாக மழை பாதுகாப்பு அங்கிகளை உடனடியாக வழங்கி வைத்தார்.

அத்துடன் அவர்களின் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தனது கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு வந்து அதைத் தீர்க்கும் வகையில் நடவடிக்கையினை எடுக்குமாறும் கிளைத் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்