அன்புசெழியன் உத்தமர் : இயக்குநர் சீனு ராமசாமி

‛சினிமா பைனான்சியர் அன்புசெழியன் உத்தமர் என இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியன் கந்துவட்டிக்கு பணம் வழங்கியது தான் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்தார்.

இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலர் அசோக்குமாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி அன்புசெழியனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‛எம்.ஜி.ஆர்., சிவாஜி போல் இன்றைய நடிகர்கள் இல்லை. அன்புசெழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. நான் நியாயத்தின் பக்கம் நிற்கிறேன் என கருத்து தெரிவித்துள்ளார்.

இது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்