தமிழ் மக்களாகிய நாம் கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும்.

தமிழ் மக்களாகிய நாம் கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும்.

(பழுகாமம் நிருபர்)

தமிழ் மக்களாகிய நாம் கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். தும்பங்கேணி, திக்கோடை, மண்டூர்40, களுமுந்தன்வெளி ஆகிய பிரதேச க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு மக்கள் அமைப்பினால் கல்விக்கருதரங்கை ஆரம்பிக்கும் போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மாணவர்கள் கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும். தற்சமயம் போட்டி நிறைந்ததாக அனைத்தும் மாற்றப்பட்டு விட்டது. சாதாரண தரப்பரீட்சையில் ஒரே தடவையில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியன உட்பட ஆறு பாடங்களில் சாதாரண சித்தியை தான் அரசதொழிலுக்கு மிகக்குறைந்த தகுதியாக கணிக்கின்றனர். ஆனால் தொழில் தேடும் பல மாணவர்களுக்கு ஒன்றிருந்தால் மற்றையது இல்லாமை அவர்கள் நேர்முக பரீட்சைகளில் தகுதிபெறமைக்கு காரணமாக அமைகின்றது.  அது மட்டுமன்றி உயர்தரத்தில் கல்வி கற்பவர்கள் எளிதாக தொழில் பெறக்கூடிய பயனுள்ள பாடத்தெரிவுகளை மேற்கொண்டு சிறந்த பெறுபேற்றை பெறுவதற்கு  முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் தமிழராகிய நாங்கள் பிற சமூகத்துடன் போட்டியிட்டு முன்னேறுவதற்கும் வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்