மனைவியை கோடாரியால் 40 முறை அடித்துக் கொன்ற கணவன்..

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்சம் 22 ஆண்டுகளாவது அவர் சிறைவாசம் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பிர்மிங்காம் நகரை சேர்ந்தவர் நோர்பெர்ட் சிக்கிரிமா (42). இவர் மனைவி நயஷா கஹாரி (35). தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் மனைவி நடத்தையில் நோர்பெர்ட்டுக்கு சந்தேகம் வந்த நிலையில் இது குறித்து தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.
இதன் காரணமாக நயஷாவை கண்காணிக்க தனியார் புலன்விசாரணை அதிகாரியை நோர்பெர்ட் நியமித்திருந்தார்.
பின்னர் தான் விஷம் குடித்து இறக்க போவதாக நண்பர்களிடம் நோர்பெர்ட் கூறியுள்ளார்.
ஆனால் அதை செய்யாத அவர் நயஷாவை காரில் ஒரு இடத்துக்கு கூட்டி சென்று தான் மறைத்து வைத்திருந்த கோடாரியால் 40 முறை அடித்து கொலை செய்துள்ளார்.
சடலத்தை காரில் வைத்து கொண்டு நோர்பெர்ட் சென்ற நிலையில் பொலிசார் அவரை பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நோர்பெர்ட் மீது இத்தனை மாதங்களாக நீதிமன்றம் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எப்படியும் சிறையிலிருந்து வெளிவராதபடி குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் தண்டனையாவது அனுபவித்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்