தமிழர்களே உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய இலவச GAME

உங்கள் பிள்ளைகள் மணித்தியலக் கணக்கில், மோபைல் போனில் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் இந்த திருக் குறள் கேம்ஸை டவுன்லோட் செய்து கொடுத்தால். அதனை விளையாடுவதன் மூலம் அவர்களின் தமிழ் கல்வி அறிவி விருத்தியாகும்.

இது தொடர்பாக இந்த கேம்ஸை உருவாக்கியவர் தெரிவிக்கையில்,..

உலகவரலாற்றில் எத்தனையோ மொழிகள் தோன்றியுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை இன்றுவரை. நின்று நிலைக்கவில்லை. உலக மொழிகள் அனைத்திலிருந்தும் எமது தாய்மொழியாம் தமிழ்மொழி தனித்துவமானது. காலத்தை வென்றமொழி எங்கள் கன்னித்தமிழ்மொழி. உலகின் மூத்த மொழிகளில் முதன்மையானது. கணனியுகத்திற்கேற்ப இசைந்துகொடுக்கும் இயல்புள்ளது. இயற்கையோடிணைந்த இனியமொழி. இரண்டாயிரம் ஆண்டிற்கு மேலான இலக்கணச்செழுமைமிக்க செம்மொழி.

இந்த இனியமொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம் என்பதில் பெருமைகொள்ளும் அதேவேளை, இத்தனை ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் செழித்து நிலைத்திருக்கும் எம்செம்மொழியை இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு பேணிக்காக்க வேண்டியதும் எமது கடமையேயாகும்.

அந்த வகையில் EL-4 நிறுவனத்தினராகிய நாம் கடந்த சில வருடங்களாக வருடந்தோறும் தமிழீழத் தேசிய மாவீரர் , தினமான டிசம்பர் திங்கள் 27- இல் விளையாட்டின் மூலம் தமிழ் கற்கும் பொறிகளை உருவாக்கித் தாயவளாம் தமிழவளுக்கு அணிவித்து அழகுபார்த்துவருகின்றோம். சென்ற ஆண்டு வெளியான Kural Game , Pongu Tamil இன் தொடர்ச்சியாக இம்முறை Kural 2.0 வெளிவருகின்றது. இவ்விளையாட்டின் மூலமாக எக்காலத்திற்கும் பொருந்தும் முப்பாலாம், உலகிற்கே அறத்தைப் போதித்த ஐயன் வள்ளுவன் தந்த திருக்குறளை

எமது இளையவர்கள் பொருள்விளங்கி மனனம் செய்து கொள்வார்கள் என்ற பெருநம்பிக்கையோடு இதனை வெளியிடுவதில் நாம் பெருநிறைவடைகின்றோம். எந்தவிதமான பொருட் செலவுமின்றி போன்றவற்றினூடாக இவ்விளையாட்டினைத் தரவிறக்கம் செய்து, குறளோடு விளையாடித் தமிழறிந்து கொள்வோம்.

iOS – https://itunes.apple.com/us/app/kural-2-0/id1202361680?ls=1&mt=8

Android – https://play.google.com/store/apps/details?id=com.el4.valartamil&hl=en

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்