தமிழீழ தேசி மாவீரர் நாள் நினைவேந்தல் 2017 – பிரித்தானியா ஓக்ஸ்போட்டில்.

தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற ‘தமிழ் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2017’ எழுச்சி நினைவேந்தல் வெகு எழுச்சியாக பிரித்தானியா ஓக்ஸ்போட்டில் உள்ள உலக தமிழர் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவிடத்தில் இடம்பெற்றது தமிழீழ தேசிய கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இதில் பொதுச்சுடரை ஜெந்தன் படையணியை சேர்ந்த ஜெனார்த்தனன் ஏற்றி வைத்தார் அதை தொடர்ந்து அக வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எமக்காக தம் இன்னுயிரை நீத்த அனைத்து மாவீரச்செல்வங்களையும் நினைவுகூர்ந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்