எமது மாணவ சமூகம் மும் மொழிகளிலும் ஆற்றல் பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும்.

மாணவ சமூகமே நாளைய தலைவர்கள். அவர்கள் கரங்களிலேயே எமது நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரை மும் மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கின்றது. எனவே மும் மொழிகளிலும் ஆற்றல் பேற்றவர்களாக எமது மாணவ சமூகம் உருவாக்கப்பட வேண்டும். அதன்மூலம் பிரச்சனையற்ற புரிந்துணர்வுடன் கூடிய சிறந்த நாடாக எமது நாடு மாற்றமடையும். ஆதற்கான சக்தியை மொழி ஆற்றலே வழங்கும்.

மேற்கண்டவாறு பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் மொழியாக சிங்கள மொழியை கற்றுக்கொள்வதற்கான பயிற்சி வகுப்பை வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைத்துப் பேசிய தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் க.கோபிநாத். தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்.

ஒருவர் எத்தனை மொழியில் தேர்ச்சி பெற்றவராக உள்ளாரோ அத்தனை மனிதர்களுக்கும் சமமானவராக மதிக்கப்படுகின்றார். இதை உணர்ந்தே எமது தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சா மனோகணேசன் அவர்களின் வழிகாட்டலில் இவ்வாறான மொழிப்பாசறைகள் எமது இளைஞர் யுவதிகளுக்கு நடாத்தப்பட்டு வருகின்றது. இதில் கிழக்கு மாகாணத்திறகான் பாசறையை இப் பகுதியில் நடாத்துகின்றோம்.

இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்துவதில் மொழி முக்கிய இடத்தை வகிக்கின்றது. எமது இலங்கைத் திருநாட.டைப் பொறுத்தவரையில் சிங்கள மொழியின் அவசியமும் உணரப்படுகின்றது. இது எமது நாட்டைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாதது. எனவே சிங்கள மாணவர்களிடம் உங்கள் அன்பைப் பகிhந்து கொள்வதற்கும், அவர்கள் அன்மைப் பெற்றுக் கொள்வதற்கும்.; வாய்ப்பாக அமைகின்றது. அதன் மூலம் சிங்கள தமிழ் மாணவர்களுக்கிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு ஏற்படக் கூடியதாக இருக்கும். நல்ல கருத்துக்களை பரிமாற்றிக் கொள்வதற்கும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கும் வழிவகுக்கம். இது எதிர்கால சந்ததிகள் ஒற்றுமையுடனும் சுபீட்சத்தடனும் சாந்தி சமாதானத்தடனும் சமத்துவத்தடனும் வாழக் கூடிய நிலையை இயல்பாகவே தோற்றுவிக்கும். இன்று நாட்டின் முக்கிய தேவையாக இதுவே இருக்கின்றது.

எனவே எங்கள் சுய அபிவிருத்திக்கும் நாட்டின் சமாதான முன்னெடுப்பிற்கும் இந்த பயிற்சிப் பட்டறை அடிகோலும், என்பது எமது நம்பிக்கை. எனவே இச் சந்தர்ப்பத்தை மாணவர்கள் நல்ல முறையில் பயனபடுத்திக் கொள்ள முடியும். சமுக நல்லிணக்கத்திற்கும், பரஸபர பரிந்துணர்விற்கும் இனங்களை இணைத்துக் கொள்வதற்கும் நல்ல பாலமாக அமையும் எனத் தெரிவித்தார். இந் நிகழ்வில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகியும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்