புதிய தலைவருடன் களமிறங்கும் இலங்கை அணி

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் ‘டுவென்டி–20’ தொடருக்கான இலங்கை அணி கேப்டனாக திசரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்க உள்ளது. முதல் ஒரு நாள் போட்டி வரும் டிசம்பர் 10ம் தேதி தரம்சாலாவில் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான இலங்கை கேப்டனாக உபுல் தரங்கா நீக்கப்பட்டு திசரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலையில் கேப்டன் பதவியிலிருந்து மாத்யூஸ் விலகியதால் சண்டிமால் (டெஸ்ட்), உபுல் தரங்கா (ஒரு நாள், ‘டுவென்டி–20’) அணிக்கு தலைமை ஏற்றனர். ஆனால், இந்தியா (0–5), பாகிஸ்தான் (0–5) அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தரங்கா மோசமான தோல்வியை பெற்றுத்தந்தார். இதன் காரணமாகவே, தற்போது திசரா பெரேரா வசம் தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்