ஸ்மார்ட்போன் பேட்டரி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

15 நிமிடங்களுக்குள் ஸ்மார்ட்போன் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய தொழில்நுட்பத்தினை சம்சுங் நிறுவனமானது கண்டுபிடித்துள்ளது.

வழக்கமாக உருவாக்கப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளில் கிராபைன் எனப்படும் பொருளை கொண்டு உருவாக்கப்படும் புதியவகை பேட்ரிகளை மிகக்குறைவான நேரத்தில் சார்ஜ் செய்துகொள்ள முடியும் என சம்சுங் தெரிவித்துள்ளது.

நீடிக்கப்பட்ட திறன் அதேசமயம் அதிவேகமாக சார்ஜ்செய்துகொள்ளக்கூடிய பேட்டரி வகைகளை உருவாக்குவதே இப்போதைய சூழ்நிலைக்கு அவசியம் என்பதால் இந்த புதியவகை பேட்டரிகள் பாவனையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சாராரணமாக இப்போது ஸ்மார்ட்போன்களில் பாவிக்கப்படும் பேட்டரிகள் சார்ஜ் செய்துகொள்ள குறைந்தது 1 மணிநேரக்காலப்பகுதி அவசியம் எனினும் இந்தப் பிரச்சினைக்கு புதிய பேட்டரி தீர்வாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது ஆய்வு கூடத்தில் பரிசோதிக்கப்பட்டுவரும் குறித்த புதிய பேட்டரி பாவனையினால் ஆபத்துகள் ஏற்படக்கூடுமா என்பது தொடர்பாக தீவிரஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்