1 பில்லியன் டொலர்கள் செலவில் பிரத்தியேக தீம் பார்க்

சீனாவில் 1 பில்லியன் டொலர்கள் செலவில் பிரத்தியேக வெர்ச்சுவல் ரியாலிட்டி தீம் பார்க் உருவாக்கப்பட்டு வருகிறது.

சீனாவின் கியுஸூ மாகாணத்தில் 330 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெரும் அளவிற்கு உருவாக்கப்பட்டு வருகிறது.

விண்வெளியில் பறப்பது, ஏலியன்கள் மற்றும் டிராகன்களுடன் விளையாடுவது, பறக்கும் தட்டில் பயணிப்பது போன்ற பல்வேறு அறிவியல் அம்சங்களை இந்த பார்க் கொணடுள்ளது.

ரோலர் கோஸ்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சாதனங்களும் இதில் அடக்கம்.

இந்த தீம் பார்க்கில் உள்ள 750 தொன் ஸ்டீல்களால் உருவாக்கப்பட்ட இராட்சத டிரான்ஸ்பார்மர் ரோபோ முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இந்த பூங்கா திறக்கப்படவுள்ளதால் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்