மீண்டும் முடங்கியது வாட்ஸ்அப்.

வாட்ஸ்அப், கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக மீண்டும் இன்று (டிசம்பர் 1) சில நிமிடங்களுக்கு முடங்கியது.

மெக்ஸிகோ, கலிபோர்னியா, தெற்கு பிரேசில், ஐரோப்பாவின் பல பகுதிகள் மற்றும் பிரிட்டனில், இதன் பாதிப்பு அதிகமாக உணரப்பட்டது. இந்த குறிப்பிட்ட சில நிமிடங்களில், வாட்ஸ்அப்பில், செய்திகளை அனுப்பவோ மற்றும் பெறவோ இயலாத சூழல் நிலவியது.

கடந்த நவம்பர் 3ம் தேதியும், இதேபோன்று சில நிமிடங்களுக்கு வாட்ஸ்அப் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்