குடியுரிமையை வாரி வழங்கும் கனடா அரசு: 10லட்சம் பேருக்கு குடியுரிமை!

வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமையினை வாரி வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, போன்ற நாடுகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை பின்தள்ளியுள்ள நிலையில். கனடா அரசு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதோடு அடுத்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் பத்து லட்சம் வெளிநாட்டவர்களுக்கு கனடா குடியுரிமை பெற அனுமதி அளித்துள்ளது.

கனடாவின் வணிகங்களுக்கு தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனால் இங்கு குடிபெயரும் ஐரோப்பியர்களுக்கு முதலிடமும் ஆபிரிக்கர்களுக்கு இரண்டாமிடமும் ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு மூன்றாமிடத்தையும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் கனடாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி அளிக்கப்படுவதாகவும் எளிதில் இங்கு குடியேறலாம் எனவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்