கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் நாளைய தினம் திருக்கார்த்திகை விளக்கீடு

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் வருடாந்த திருக்கார்த்திகை விளக்கீடு நாளைய தினம் மாலை நடைபெறவுள்ளது.

கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு நாளை விசேட பூஜை மற்றும் விசேட பெரஹராவிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு நாடெங்கிலுமிருந்து அடியார்கள் கதிர்காமம் செல்வது வழக்கம் என்பதால், இதற்கென விசேட பேருந்து சேவைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை இம்முறை குமாரரலயதீபம் நாளைய தினமும், சர்வாலயதீபம் மற்றும் வீட்டில் இடம்பெறும் காத்திகை விளக்கீடும் நாளை மறுதினம் (பூரணை தினத்தன்று) இடம்பெறவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்