வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்: நெல்லையில்!

நெல்லையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், 3 பேர் அடித்து செல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று நெல்லையில் பெய்த கனமழையால் மகேந்திரகிரி மலையிலிருந்து வெளியான வெள்ளநீர் பனகுடி நகர் முழுவதும் சூழ்ந்தது. இதனால் ஆரம்ப சுகாதாரநிலையம், கோவில்கள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்தது.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தை எடுக்க சென்ற 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்