ரசிகர்களை உச்சக்கப்படுத்திய தானா சேர்ந்த கூட்டம் பட, ‘டீசர்’

சூர்யா ரசிகர்களுக்கு, தானா சேர்ந்த கூட்டம் பட, ‘டீசர்’ எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின், ‘டீசரில்’ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் பச்சை சேலை உடுத்தி, கீர்த்தி சுரேஷ் மேடையில்
நிற்கிறார்.

மேலும், ‘ஒருத்தன் பணக்காரனாக இருக்க, ஒரு கோடி பேரை பிச்சைக்காரன் ஆக்குறாங்க. மறைச்சி வைச்சிருக்க பணத்தை எடுத்தாலே, நம் நாட்டில் இருக்கிற பல பிரச்னைகளை களையலாம். தனியா நான் மட்டும் ஒண்ணும் செய்ய முடியாது; நம்ம எல்லாம் சேர்ந்தா நிச்சயமா ஏதாவது செய்யலாம்’ என, சூர்யா பேசும் வசனம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்