கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிக்கு மறுவாழ்வு அளித்த ரோரென்ரோ மாநகர பொலிஸ்.

கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி ஒருவருக்கு தேவையான உடைகளை வாங்கிக் கொடுத்து, அவருக்கு மறுவாழ்வு அளித்த ரோரென்ரோ மாநகர பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஙகை அரசு சார்பான கௌரவம் ரொரென்ரோ   பெரும்பாக பொலிஸ் தலைமை அலுவலகத்தில்  அளிக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் ரொரன்ரோ நகரில் வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து ஒரு சேர்ட் , கழுத்துப் பட்டி (டை) மற்றும் உள்ளாடை ஆகியவற்றை திருடிய குற்றத்திற்காக மேற்படி வர்த்தக நிலைய பாதுகாப்பு அதிகாரிகளினால் தன்னிடம் ஒப்படைக்கபபட்ட இளம் வயது நபர் ஒருவருக்கு நேர்முகப்பரீட்சை ஒன்றுக்கு செல்லும் வகையில் தேவையான ஆடைகளை தனது செலவில் வாங்கிக்கொடுத்த தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரியான நிரான் ஜெயநேசன் அவர்களுக்கு இ ன்று மாலை இலஙகை அரசு சார்பான கௌரவம் ரொரென்ரோ   பெரும்பாக பொலிஸ் தலைமை அலுவலகத்தில்  அளிக்கப்பட்டது.

மேற்படி கௌரவத்தை அ வருககு அளித்தவர் கனடாவிற்கான இலங்கையின் துணைத்தூதுவர் (ரொரென்ரோ) திரு மொகமட் ஜவ்ஹர் ஆவார்.

இங்கு காணப்படும் படங்களில் மேற்படி தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரியான நிரான் ஜெயநேசன் அவர்களையும் அவரது நண்பர் மற்றும் உறவினர்கள், அத்துடன் தமிழ் பேசும் வர்த்தக நண்பர்கள் ஆகியோர் இங்கு காண்பபடுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்