எமது நாட்டில் பனை வளத்தில் இருந்து  தயாரிக்கப்படும் கைப்பணி பொருட்களை மேலைத்தேய நாடுகளுக்கு சந்தைப்படுத்தும் நோக்கில் உடன்படிக்கை…

எமது நாட்டில் பனை வளத்தில் இருந்து  தயாரிக்கப்படும் கைப்பணி பொருட்களை மேலைத்தேய நாடுகளுக்கு சந்தைப்படுத்தும் நோக்கில்  கனடா மற்றும் வட அமெரிக்காவுக்கான உத்தியோக பூர்வ சந்தைப்படுத்தும் உரிமையை கைச்சாத்திடுவது தொடர்பில்  இலங்கை பனை அபிவிருத்தி சபையும் , கனேடிய நிறுவனமான “ ஈழம் கிப்ட் “ நிறுவனமும் 30.நவம்பர் .2017 அன்று உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த உடன்படிக்கை மூலம் போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம்களுக்கு பனை வள தயாரிப்புகளை சர்வதேச தரத்துக்கு ஏற்ற வகையில் தயாரிக்கும் பாயிட்ச்சிகள் வழங்கப்பட்டு அவற்றை கனடா மற்றும் மேலைத்தேய நாடுகளில் சந்தை படுத்துவதன் மூலம் பனை வள தயாரிப்புகளை செய்யம் மக்களின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது .

முதல் முறையாக எமது பனை வள பொருட்களை வெளிநாட்டில் சந்தைப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிக்கு கனடா அமேரிக்கா வாழ் மக்கள் “ஈழம் கிபிட் ” நிறுவனத்துக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டுகிறோம் .

நீங்கள் இந்த பொருட்களை வாங்குவதன் மூலம் உங்கள் பங்களிப்பு எமது நாட்டில்  உள்ள மக்களின் வருமானத்தையே அதிகரிக்க காரணமாகிறது .

வெளிநாடுகளில் எமது பனை வளத்தை சந்தைப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம்.-[

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்