பாலகிருஷ்ணா, பவன்கல்யாணுடன் மோதும் சூர்யா

தமிழ் சினிமாவில் நடிகர்களில் சூர்யா படங்களுக்குத்தான் தெலுங்கில் அதிகப்படியான வரவேற்பு இருந்து வருகிறது. அவர் நடித்த பெருபாலான படங்கள் தெலுங்கில் டப்பாகி நல்ல வசூலை ஈட்டியுள்ளன. இந்த நிலையில், தற்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தையும் தெலுங்கில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட தயாராகி வருகிறார்கள்.

மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் பாடல் என ஒவ்வொன்றுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச்சாகியுள்ள நிலையில், தானா சேர்ந்த கூட்டம் படத்தை தெலுங்கில் கேங் -என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். சூர்யாவுடன் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ் உள்பட சில பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருப்பதால், தெலுங்கில் முந்தைய சூர்யா படங்களின் வசூலை இந்த கேங் படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மேலும், பொங்கலுக்கு வெளியாகும் இந்த படம் தெலுங்கில் ஜனவரி 12-ந்தேதி வெளியாகிறது. அதே நாளில் சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துள்ள ஜெய்சிம்ஹா, பவன் கல்யாண் நடித்துள்ள அக்னதாவாசி ஆகிய படங்களும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்