இந்த வில்லன் நடிகர் யார்..?

திரைப்படங்களில் வில்லன்கள், அடியாட்கள் என்றால் முரட்டு உடலும், மிரட்டும் பார்வையம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த தகுதி இருப்பவர்களுக்கு எளிதில் வில்லன், அடியாள் கேரக்டர்களில் வாய்ப்பு கிடைக்கும்.
அப்படிப்பட்ட தகுதி உடையவர்தான் 48 வயதான விஜய் ஜாஸ்பர். கிட்டத்தட்ட 170 கிலோ எடையுடன் முரட்டு உடற்கட்டுடன், மிரட்டும் பார்வையை கொண்டவர்.
இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வேலையில் நல்ல சம்பளம் வாங்கி வந்துள்ளார்.
அந்த வேலையில் போர் அடித்ததால், தனக்கு பிடித்தமான சினிமா துறைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஜாஸ்பரின் உடல் கட்டுமஸ்தை பார்த்ததும் உடனே வாய்ப்பு கிடைத்தது.
முதன் முதலில் 2003-ல் சரத்குமார் நடிப்பில் வெளியான திவான் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவருடய படங்களான சத்ரபதி, கம்பீரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதன்பின்னர், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படத்தில் போலீஸாக நடித்திருப்பார். ஆனால், போலீஸ் உடையில் நடிக்கவில்லை மஃப்டியில் தான் இருப்பார்.
தொடர்ந்து நாணயம் படத்தில் படம் முழுவதும் வரும் வில்லனின் நண்பர் கேரக்டராகவும், ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் அடியாளாகவும் நடித்துள்ளார்.
மேலும், விஜய் நடித்து வெளியான புலி திரைப்படத்தில் அவருடன் சண்டை போடும் மிக முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் அதில் நடிக்கவும் தயாராக உள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்