மடிக்கக்கூடிய கைத்தொலைபேசி அறிமுகம்!

சம்சுங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் தொலைபேசியினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

Samsung W2108 எனும் குறித்த கையடக்க தொலைபேசி 4.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Qualcomm Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இவற்றுடன் 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்