பொங்கலிற்கு வெளியாகும் பிரபுதேவாவின் படம்!

சூர்யா, விஷால், விக்ரம் படங்களைத் தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் நகைச்சுவைப் படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஷாலின் ‘இரும்புத்திரை’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, விமலின் ‘மன்னர் வகையறா’ உள்ளிட்ட படங்கள் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குலேபகாவலி’ படமும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமுக இயக்குநர் எஸ்.கல்யாண் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா – ஹன்சிகா முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், சந்தியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை அறம் படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரித்துள்ளதுடன், எம்.ஜி.ஆர் நடிப்பில் 1955-ஆம் ஆண்டு வெளியான ‘குலேபகாவலி’ படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து படத்தின் டிரைலரும் வெளியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்