விஜயின் படத்தில் பிக்பொஸ் ஜூலி!

பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஜூலிக்கு விஜய் நடிக்கும் 62 ஆவது படத்தில் முக்கியமான பாத்திரம் கிடைத்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலி பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானதுடன், இவர் முன்னதாக ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி நடந்த போராட்டத்தில் பங்கு பெற்று சிறிது பிரபலத்தினைப் பெற்றிருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமே இவர் பிரபலமாக அறியப்பட்டார்.

தற்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்திருக்கும் நிலையில், ஜூலியை விஜய் நடிக்கும் 62 படத்தில் ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்