நடிகை ஓவியா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது-சிக்கலில் ஓவியா….??

BiggBoss நிகழ்ச்சி யாருக்கு லாபமோ தெரியவில்லை. ஆனால் அந்நிகழ்ச்சி மூலம் முன்னணி நடிகைகளுக்கு இணையான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றவர் நடிகை ஓவியா.

நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என கமிட்டானார். சமீபத்தில் கூட காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்று தகவல்கள் வந்தன. இந்த நிலையில் இப்பட படப்பிடிப்பு தொடங்க தாமதமாவதால் படத்தில் இருந்து ஓவியா விலகியிருக்கிறாராம்.

இதுகுறித்து படக்குழு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, ஓவியாவோ, காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்புகள் துவங்க தாமதம் ஆனதாலேயே, விலகுவதாக விளக்கம் அளித்துள்ளாராம். அதோடு தான் வாங்கிய முன்பணத்தையும், வட்டியுடன் நடிகை ஓவியா திருப்பி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்