காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பலை தேடுவதை நிறுத்தியது அரசு

கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அட்லாந்திக் கடற்பரப்பில் அர்ஜென்டீனாவுக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் 44 பேருடன் பயணித்த நிலையில் காணாமல் போயிருந்தது.

இதையடுத்து இந்த நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணிகளை சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஆர்ஜென்டீன அரசு முன்னெடுத்து வந்திருந்தது.

இந்த நிலையில் குறித்த கப்பலின் சிதைந்த பாகங்கள் கடலின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, தேடும் பணிகளை அந்நாட்டு அரசாங்கம் கைவிட்டது.

இது தொடர்பில் கடுமையான விமர்சினங்களை முன்வைத்துள்ள குறித்த கப்பலில் பயணம் செய்தவர்களின் குடும்மபத்தினர், கப்பலை தேடும் பணிகளை மீண்டும் முன்னெடுக்கவேண்டுமென வலியுறுத்தி பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்த கப்பலில் பயணித்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்