71 வயது மூதாட்டி பட்டினியால் பலி..

ஜார்கண்ட் மாநிலம் கார்க்வா மாவட்டத்தில் கோர்டா கிராமத்தை சேர்ந்த 71 வயது மூதாட்டி பிரம்னி கன்வர். ஏழையான இவர் ரேசனில் மத்திய அரசின் ‘இந்தியோதனா அன்ன போஜனா’ என்ற திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு பொருட்கள் பெற்று வந்தார்.

இந்த நிலையில், கிராமத்தில் ரேசன் கடையில் இருந்து ‘இந்தியோதனா அன்ன போஜனா’ திட்ட கார்டுகளுக்கு உணவு பொருட்கள் வழங்க மறுத்து விட்டனர்.

எனவே உணவு பொருள் கிடைக்காததால் பிரம்னி கன்வர் பட்டினியால் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த சப்-டிவிசனில் மாஜிஸ்திரேட்டு பிரம்னி வீட்டுக்கு நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது அவர் வீட்டில் சமைக்க உணவு தானியங்கள் எதுவும் இல்லை.

இச்சம்பவம் குறித்து துணை கமி‌ஷனர் நேகா அரோரா விசாரணை நடத்த உத்தர விட்டார். பிரம்னியின் மரணம் குறித்து தற்போது எதுவும் இயலாது. பிரேத பரிசோதனைக்கு பிறகே அதுபற்றி தெரியவரும் என்றார்.

மத்திய கிராம வளர்ச்சித் துறை மந்திரி ராம் கிரியில் யாதவ் கூறும்போது, “தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைவருக்கும் உணவு பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதில் முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்